தேசியப் பெண்கள் ஆணையத்தின் 30-வது நிறுவன தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

Prime Minister Shri Narendra Modi addressed 30th National Commission for Women Foundation Day programme today via video conference. The theme of the programme ‘She The Change Maker’ is aimed at celebrating the achievements of women in different fields. The State Commissions for Women, Department of Women and Child Development in State Governments, University and College teaching faculty and students, voluntary organisations, women entrepreneurs and business associations were present. The Union Minister for Women and Child Development Smt Smriti Zubin Irani; Ministers of State Dr. Munjpara Mahendrabhai Kalubhai and Smt Darshana Jardosh; Chairperson, National Commission for Women Ms. Rekha Sharma were among those present on the occasion.

Addressing the gathering, the Prime Minister greeted on the 30th Foundation Day of the National Commission for Women. “The milestone of 30 years, whether in the life of an individual or of an organization, is very important. This is the time for new responsibilities and for moving forward with new energy”, he said.

The Prime Minister remarked that today, in changing India, the role of women is continuously expanding. Therefore, he said, the expansion of the role of the National Commission for Women is also the need of the hour. All the women’s commissions of the country will also have to increase their scope and give a new direction to the women of their states.

The Prime Minister noted that for centuries, India’s strength has been the small local industries or the MSMEs. In these industries, women have the same role as men. The Prime Minister said that the old thinking had restricted women and their skills to domestic work. It is necessary to change this old thinking in order to advance the economy of the country. Make in India is doing this today. AatmaNirbhar Bharat campaign is linking the ability of women with the development of the country, he said.This change is visible as about 70 per cent beneficiaries of Mudra Yojna are women. The country has seen a three-fold increase in the number of women self-help groups in the last 6-7 years. Similarly, in more than 60 thousand startups that have emerged after 2016, 45 percent have at least one woman director.

The Prime Minister said the participation of women in the growth cycle of new India is increasing relentlessly. Women’s Commissions should work to promote and give maximum recognition to this role of women in the entrepreneurship of the society. The Prime Minister informed that since 2015 185 women have been honoured with Padma Awards. This year too, 34 women figured among the awardees in different categories. This is a record as this many awards to women are unprecedented, said the Prime Minister.

The Prime Minister said in the last 7 years, the policies of the country have become more sensitive towards women. Today India is among the countries with provision of maximum maternity leave. Marriage at an early age does not hinder the education and career of daughters so the age of marriage of daughters is being attempted to be raised to 21 years.

The Prime Minister also talked about the historical distance of rural women from empowerment. He listed the steps such as 9 crore gas connections and toilets. Pucca houses of PM Awaas Yojna in the name of women of the house, support during pregnancy, Jan Dhan accounts, that make these women the face of changing India and women empowerment.

The Prime Minister said when women make a resolution, they only set the direction of that. That is why whenever a government does not prioritise women safety, women have ensured their departure from power.  Shri Modi stressed that the government is working with a policy of zero tolerance for crime against women. There are strict laws in this regard including capital punishment for heinous cases of rape. There are fast track courts and steps like  more women help desks in police stations, 24 hour helplines, portal to deal with cyber crimes are being taken. 

XXXXXXXXXXXXXX

தேசிய மகளிர் ஆணையத்தின் 30-வது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி இன்று உரையாற்றினார். ‘ஷி தி சேஞ்ச் மேக்கர்’ (மாற்றத்தை உருவாக்கும் பெண்) எனும் தலைப்பிலான நிகழ்ச்சியின் கருப்பொருள் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டதாகும். மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் வணிக சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி; இணை அமைச்சர்கள் டாக்டர் முன்ஜப்பரா மகேந்திரபாய் கலுபாய் மற்றும் தர்ஷனா ஜர்தோஷ்; தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தேசிய மகளிர் ஆணையத்தின் 30-வது நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். “30 ஆண்டுகள் எனும் மைல்கல், ஒரு தனிநபரின் வாழ்க்கையில் அல்லது ஒரு நிறுவனத்தில் மிகவும் முக்கியமானது. புதிய பொறுப்புகள் மற்றும் புதிய ஆற்றலுடன் முன்னேறுவதற்கான நேரம் இது”, என்றார் அவர்.

இன்று, இந்தியாவை மாற்றுவதில், பெண்களின் பங்கு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே, தேசிய மகளிர் ஆணையத்தின் பணியை விரிவுபடுத்துவது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார். நாட்டின் அனைத்து மகளிர் ஆணையங்களும் தங்கள் நோக்கத்தை அதிகரித்து, தங்கள் மாநில பெண்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்ட  வேண்டும் என்றார்.

பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் பலம் சிறிய உள்ளூர் தொழில்கள் அல்லது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் தொழில்களில் ஆண்களுக்கு நிகரான பங்கு பெண்களுக்கும் உண்டு. பழைய சிந்தனை,  பெண்களையும் அவர்களது திறமைகளையும் வீட்டு வேலைகளில் கட்டுப்படுத்திவிட்டதாக பிரதமர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்த பழைய சிந்தனையை மாற்ற வேண்டியது அவசியம். மேக் இன் இந்தியா இன்று இதைச் செய்கிறது. தற்சார்பு இந்தியா பிரச்சாரம் பெண்களின் திறனை நாட்டின் வளர்ச்சியுடன் இணைக்கிறது, என்றார் அவர். முத்ரா திட்டத்தின் 70 சதவீத பயனாளிகள் பெண்கள் என்பதால் இந்த மாற்றம் நன்றாக புலப்படுகிறது. கடந்த 6-7 ஆண்டுகளில் பெண் சுயஉதவி குழுக்களின் எண்ணிக்கை நாட்டில்  மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல, 2016-க்குப் பிறகு உருவான 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், 45 சதவிகிதம் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது உள்ளார் என்று அவர் கூறினார்.

புதிய இந்தியாவின் வளர்ச்சிச்  சுழற்சியில் பெண்களின் பங்களிப்பு இடைவிடாமல் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். சமூகத்தின் தொழில்முனைவில் பெண்களின் இந்த பங்கை ஊக்குவிக்கவும், அதிகபட்ச அங்கீகாரத்தை வழங்கவும் மகளிர் ஆணையங்கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும். 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 185 பெண்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றவர்களில் 34 பெண்கள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளனர். பெண்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விருதுகள் கிடைத்துள்ளதால் இது ஒரு சாதனையாகும் என்றார் பிரதமர்.

கடந்த 7 ஆண்டுகளில், நாட்டின் கொள்கைகள் அதிகளவில் பெண்கள் நலன் சார்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். இன்று, மகப்பேறு விடுப்பு அதிகம் வழங்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. சிறுவயதில் திருமணம் செய்து வைப்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க எடுக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் பேசினார். 9 கோடி எரிவாயு இணைப்புகள், கழிவறைகள் போன்ற நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். வீட்டில் உள்ள பெண்களின் பெயரில் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் நல்ல வீடுகள், கர்ப்ப காலத்தில் ஆதரவு, ஜன்தன் கணக்குகள் உள்ளிட்டவை இந்தியா மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலின் மாறிவரும் முகமாக பெண்களை மாற்றுகிறது.

பெண்கள் தீர்மானம் எடுக்கும் போது அதற்கான திசையை மட்டுமே அவர்கள் அமைக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். அதனால் தான் பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை கொடுக்காத போதெல்லாம், அத்தகைய அரசை அதிகாரத்திலிருந்து  வெளியேற்றுவதை பெண்கள் உறுதிசெய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச்  சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையுடன் அரசு கையாள்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். கொடூரமான கற்பழிப்பு வழக்குகளில் மரண தண்டனை உட்பட பல தண்டனைகள் வழங்கும்  கடுமையான சட்டங்கள் உள்ளன. விரைவு நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அதிகமான மகளிர் உதவி மையங்கள், 24 மணிநேர உதவி எண்கள், சைபர் குற்றங்களைச் சமாளிக்க போர்டல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திவாஹர்

Leave a Reply