இந்திய அணுசக்தி நிறுவனங்களும் அணு மின் நிலையங்களும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்திய அணுசக்தி நிறுவனங்களும் அணு மின் நிலையங்களும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய அணு சக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், இந்திய அணு சக்தி அமைப்பு ஏற்கனவே வடிவமைப்பு மேம்பாடு, செயல்பாட்டு முறைகளில் கடுமையான நடைமுறையைப் பயன்படுத்துகின்றன. இதனால் இவை சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுப்பவையாக உள்ளன என்றார்.

இந்திய அணு சக்தி அமைப்புகளின் பாதுகாப்பும், பந்தோபஸ்து கட்டமைப்பும் இணையதளம் மற்றும் உள்ளூர் ஐடி வலைப்பின்னல்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

திவாஹர்

One Response

  1. MANIMARAN February 10, 2022 10:36 pm

Leave a Reply