எலியின் மூளையிலிருந்து நரம்பியல் சிக்கனல்களை பெறுவதன் மூலம், மூளையில் நீண்டகால நினைவாற்றல் ஒருங்கிணைப்பு செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கான கருவியை இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
கற்றலும், நினைவாற்றலும் மூளையின் அடிப்படை செயல்முறைகள். இப்பிரிவு, நரம்பியல் துறையில் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பிரிவுகளில் ஒன்று. புதிய தகவல் மற்றும் நினைவை பெறுவதற்கு கற்றல் காரணமாக இருக்கிறது. பெறப்பட்ட தகவல்களை தக்கவைப்பது, நீண்டகால நினைவுக்கு வழிவகுக்கிறது. இந்த புதிய கருவி, நடத்தை குறியீடு மாதிரியை பயன்படுத்துகிறது. நடத்தை பகுப்பாய்வு மூலம், நீண்ட கால நினைவாற்றலின் ஒருங்கிணைப்பை ஆய்வு செய்வது புதிதானது. இதேபோல், விவோ எலக்ட்ரோபிசியாலஜி என்ற தொழில்நுட்பம் மூலம், நினைவாற்றல் ஒருங்கிணைப்பில் பொதிந்துள்ள அம்சங்களை ஆராய பயோ-சிக்னல்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. பரிசோதனைக் கூடத்தில், எலியின் மூளையிலிருந்து நரம்பியல் சிக்னல்களை பெற்று இந்த விவோ எலக்ட்ரோபிசியாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் முதல் முறையாக, இந்த புதிய கருவியை புதுதில்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ரசாயனம் மற்றும் அறிவியல் கல்லூரியின் நச்சுயியல் துறை பேராசிரியர் சுகேல் பர்வேஸ் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கியுள்ளனர். இது மூளையில் நீண்டகால நினைவாற்றல் ஒருங்கிணைப்பை புரிந்து கொள்வதற்கான நடத்தை குறிச்சொல் மாதிரியை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சி கட்டுரை, ‘தெரனாஸ்டிக்ஸ்’ மற்றும் ‘ஏஜிங் ரிசர்ச் ரெவியூஸ்’ என்ற இதழ்களில் வெளியாகியுள்ளது.
இந்த ஆராய்ச்சியாளர்கள் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் செயல்படும் நச்சுயியல் துறையில் உருவாக்கப்பட்ட விவோ எலக்ட்ரோபிசியாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.
–திவாஹர்