உக்ரைன் யுத்தகளத்தில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ரஷ்ய நாட்டின் அத்துமீறிய படையெடுப்பால், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மாநகரம் உள்பட, பிரதான நகரங்கள் அனைத்தும் யுத்த களமாக மாறியுள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் உக்ரைன் யுத்தகளத்தில் சிக்கிக்கொண்டனர்.

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களையும் மீட்கும் பணியில் இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டு, அங்குள்ள இந்தியர்களை தாய்நாட்டிற்கு மீட்டு வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இத்தருணத்தில், ரஷ்யா, உக்ரைன் ஆகிய இருநாட்டு தலைவர்களுடனும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொடர்புக் கொண்டு பேசியதின் விளைவாக, யுத்தகளத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணி தற்போது தொய்வின்றி நடந்து வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான ஆகும் அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார், அதற்காக மீட்பு குழுவையும் நியமித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கி உத்தரவிட்டார்

இந்நிலையில் தாயகம் திரும்பிய மாணவர்களை, தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டம், ஜோதிபுரத்தில் இன்று நேரில் சந்தித்து உரையாடினார்.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply