படங்கள் சொல்லும் பாடம்!-துக்கம்; சந்தோஷம்!-உக்ரைன் யுத்தகளம்..!
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, உக்ரைன் பெண் ராணுவ வீரர் ஒருவர், யுத்தகளத்தில் ஒரு கையில் துப்பாக்கியையும், மற்றொரு கையில் பூங்கொத்தையும் ஏந்தி மகிழ்ச்சியோடு புன்னகைத்த தருணம்.யுத்த களத்திற்கு செல்வதற்கு முன்பு அவர்கள் பெற்ற பிள்ளையை கண்ணீரோடு கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் உக்ரைன் இராணுவ தம்பதி.உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்ய படை வீரர்கள், யுத்த களத்தில் வீரமரணம் அடைந்த நிலையில், அவர்களது உடல்களை உடனே எடுத்துச் செல்ல முடியாமல், செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களின் வருகைக்காக பிணமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் கோரக் காட்சி!
மேற்கானும் காணொளியில், யுத்தகளத்தில் தன்னை பார்க்க வந்த தோழியை, சாலையில் வழிமறித்து காதலை வெளிப்படுத்திய உக்ரைன் படைவீரர் மற்றும் போருக்கு வந்த இடத்தில் மதுக்கடையில் புகுந்து மது அருந்தி மயங்கி கிடந்த ரஷ்ய படைவீரர்!-ஒரு சந்தோஷம்; ஒரு சோகம்!
Dr.துரை பெஞ்சமின். Editor and Publisher UTL MEDIA TEAM www.ullatchithagaval.com Mobile No.98424 14040. E-mail : editorutlmedia@gmail.com