இலங்கையில் தற்போது நிலவும் டாலர் நெருக்கடியை உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பொருட்களை நம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய இவ்வளவு டாலர்களை செலவு செய்துள்ளோம். இதன் விளைவாக, நமது உள்ளூர் தயாரிப்புகள் பல சரிந்தன என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நம் நாட்டு பழமரங்கள் அழுகும்போது, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் விளையும் பச்சைப் பயறு விற்கமுடியாமல், சேனை விவசாயிகள் தவித்து வருகின்றனர். அப்படி இருந்தும் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
இப்போதே இந்த முறையை நிறுத்திவிட்டு, இந்த டாலர் நெருக்கடியை நமது உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-ப. சியாமளா தேவி
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com