தமிழ் ஆண்டுகள் -60
எண் பெயர் வருடம்
1 பிரபவ 1987-1988
2 விபவ 1988-1989
3 சுக்ல 1989-1990
4 பிரமோதூத 1990-1991
5 பிரசோற்பத்தி 1991-1992
6 ஆங்கீரச 1992-1993
7 ஸ்ரீமுக 1993-1994
8 பவ 1994-1995
9 யுவ 1995-1996
10 தாது 1996-1997
11 ஈஸ்வர 1997-1998
12 வெகுதானிய 1998-1999
13 பிரமாதி 1999-2000
14 விக்கிரம 2000-2001
15 விஷூ 2001-2002
16 சித்திரபானு 2002-2003
17 சுபானு 2003-2004
18 தாரண 2004-2005
19 பார்த்திப 2005-2006
20 விய 2006-2007
21 சர்வசித்து 2007-2008
22 சர்வதாரி 2008-2009
23 விரோதி 2009-2010
24 விக்ருதி 2010-2011
25 கர 2011-2012
26 நந்தன 2012-2013
27 விஜய 2013-2014
28 ஜய 2014-2015
29 மன்மத 2015-2016
30 துன்முகி 2016-2017
31 ஹேவிளம்பி 2017-2018
32 விளம்பி 2018-2019
33 விகாரி 2019-2020
34 சார்வரி 2020-2021
35 பிலவ 2021-2022
36 சுபகிருது 2022-2023
37 சோபகிருது 2023-2024
38 குரோதி 2024-2025
39 விசுவாசுவ 2025-2026
40 பரபாவ 2026-2027
41 பிலவங்க 2027-2028
42 கீலக 2028-2029
43 சௌமிய 2029-2030
44 சாதாரண 2030-2031
45 விரோதிகிருது 2031-2032
46 பரிதாபி 2032-2033
47 பிரமாதீச 2033-2034
48 ஆனந்த 2034-2035
49 ராட்சச 2035-2036
50 நள 2036-2037
51 பிங்கள 2037-2038
52 காளயுக்தி 2038-2039
53 சித்தார்த்தி 2039-2040
54 ரௌத்திரி 2040-2041
55 துன்மதி 2041-2042
56 துந்துபி 2042-2043
57 ருத்ரோத்காரி 2043-2044
58 ரக்தாட்சி 2044-2045
59 குரோதன 2045-2046
60 அட்சய 2046-2047
கடந்த கால பலன்கள்:
சார்வரி ஆண்டு: 2020-2021
சார்வரி ஆண்டு (2020-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2021 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்.
சாருவரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரமறு நோயாற் றிரிவார்கள் மாரியில்லை
பூமிவிளை வில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏமமின்றிச் சாவா ரியம்பு
விளக்கம்:
அதாவது, சாருவரி ஆண்டில் அனைத்து தரப்பு மக்களும் வீரம் அற்றுபோய் நோயுற்று திரிவார்கள். மழையில்லை, பூமியில் விளைச்சலும் இல்லாமல், குழந்தைகளும், மற்றவர்களும் வயிற்றுக்கு உணவு இன்றி இறப்பார்கள்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பிலவ ஆண்டு : 2021-2022
பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை
பாலுமின்றிச் செயபுவனம் பாழ்
விளக்கம்:
அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நிகழ்கால பலன்கள்:
சுபகிருது ஆண்டு: 2022-2023
சுபகிருது ஆண்டு (2022-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2023 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:
சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்
நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்
விளக்கம்:
அதாவது, சுபகிருது ஆண்டில் சோழநாடு பாழாகும்; மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்.
ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.
–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
சோழ தேசம்.
பண்டைய சோழ நாடு என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும். தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள். இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.
இந்த சோழ தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.
கி.பி 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.
தற்போதைய திருச்சிராப்பள்ளி நகரத்தின் உறையூர், ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தலைநகரம் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.
இந்த சோழ தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை அக்காலத்தில் செழிப்பான பூமியாக இருந்தது.
ஆனால், இந்த சோழ தேசம் எதிர்காலத்தில் என்னாகும்?!
காலம்தான் தீhமானிக்கும்.
–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com