எந்தவொரு தனிநபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் அவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானது. அதேநேரம், பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள், கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது.
ஒருவேளை கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தால், அவற்றை நீக்கிடவேண்டும். பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவோ, அறிவிப்பாணையோ வெளியிட்டிருந்தால, அவற்றை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்” இவ்வாறு இந்த தீர்ப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
இந்த தீர்ப்புரையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
12077_2021_5_1502_35439_Judgement_02-May-2022_watermarked
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com