இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.
அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா்.
மேலும் பிரதிநிதிகள் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ. மார்க் கோல்டிங் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்தார். கலந்துரையாடலின் போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார தொடர்புகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை ஊக்குவிப்பது குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
–எம்.பிரபாகரன்