பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, இமானுவேல் மேக்ரான் அமைச்சரவையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக எலிசபெத் போர்ன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக எலிசபெத் போர்ன் 2020 முதல் 2022 வரை பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸின் அரசாங்கத்தில் தொழிலாளர்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது அவரின் கண்காணிப்பின் கீழ், பிரான்ஸில் வேலையின்மை 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 61 வயதான எலிசபெத் போர்ன் ஒரு திறமையான தொழில்நுட்ப வல்லுநராகக் கருதப்படுகிறார்.
பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com