ஜப்பான், தென்கொரிய நாடுகளில் தமது 5 நாள் அரசு முறைப் பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார்.

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­திற்­கான அமெ­ரிக்­கா­வின் ஆதரவை வலுப்­படுத்­தும் நோக்­கில் தமது முதல் ஆசி­யப் பய­ணத்­தைத் தொடங்­கி­உள்ள அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நேற்று மாலை தென்­கொரியா சென்று சேர்ந்­தார்

இந்­தியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் ஆகிய நாடு­கள் அங்­கம் வகிக்­கும் ‘குவாட்’ எனும் நான்கு தரப்பு கூட்­ட­மைப்­பின் உச்­ச­நிலை சந்­திப்பு ஜப்­பா­னில் வரும் 24-ஆம் தேதி நடை­பெற உள்­ளது.

இதில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் ஜப்­பான் செல்­கி­றார். அதற்கு முன்­ன­தாக நேற்று தென்­கொ­ரி­யா­வுக்­குச் சென்­றார் பைடன்.

அதன் பிறகு அவர் நேராக, சாம்­சங் எலக்ட்­ரா­னிக்ஸ் நிறு­வ­னத்­தின் குறை­க­டத்தி தொழிற்­சா­லைக்குச் சென்­றார். அங்கு தென்­கொ­ரி­யா­வின் புதிய அதி­பர் யூன் சுக் யோலை சந்­தித்­தார் .

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply