குவாட் மாநாட்டிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் , ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு வலுவானது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான மதிப்பீடுகள் பிணைப்பை மேலும் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவும், அமெரிக்காவும் முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதற்கு நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.யுக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், இதனால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பிரதமர், அமெரிக்க அதிபருடன் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது ஒருமித்த கருத்துள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது போன்றவை குறித்தும் நான்கு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
–திவாஹர்