புனேவில் உள்ள லஷ்மிபாய் தகதுஷேத் ஹல்வாய் தத்தா மந்திர் அறக்கட்டளையின் 125-வது ஆண்டு விழாவுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள திருமதி லஷ்மிபாய் தகதுஷேத் ஹல்வாய் தத்தா மந்திர் அறக்கட்டளையின் 125-வது ஆண்டு விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, புனேவில் கணபதி கோயில் தத்தாத்ரேயா கோயிலை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியதற்காக தகதுஷேத் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

தத்தாத்ரேயா கோயிலை புனரமைத்தது மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளிலும் திருமதி லஷ்மிபாய் தகதுஷேத் ஹல்வாய் தத்தா மந்திர் அறக்கட்டளை ஈடுபட்டு வருவதற்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply