கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடினமான தருணங்களில் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்தது!- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

விடுதலைப்  பெருவிழாவின் ஒரு பகுதியாக செபியுடன் இணைந்து பொருளாதார விவகாரங்கள் துறை கொண்டாடும் வாராந்திர விழா நிகழ்ச்சியை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய அடிப்படைவாதிகள் மீண்டும் ஒருமுறை குரல் எழுப்ப தொடங்கியுள்ளதாகக் கூறினார். ஏனென்றால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

கொவிட் தொற்று பாதிப்புக்கு முன்னதாக பெருநிறுவனங்களுக்கான வரி குறைத்தல், சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு பெரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதாகக் கூறினார்.  அவசர கால கடன்  உத்தரவாத திட்டம் குறித்து குறிப்பிட்ட நிதியமைச்சர், 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3.19 லட்சம் கோடி  ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டம் 2023-ஆம் ஆண்டு வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நோய்த் தொற்றுக் காலத்தில் பல்வேறு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று ஆய்வறிக்கை தெரிவிப்பதாகவும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply