குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல்ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21ல் நடக்கிறது.
நாட்டின் 14-வது குடியரசு தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை 24ம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர் அனுாப் சந்திர பாண்டே ஆகியோர், மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகங்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 9) தலைமை தேர்தல்ஆணையர் ராஜிவ் குமார், ‛குடியரசு தலைவர் தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.,க்கள், 4,033 எம்எல்ஏ.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்த ஓட்டுகளின் மதிப்பு 10,86,431. ராஜ்யசபா தலைமை செயலர் பிரமோத் சந்திர மோதி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். வேட்புமனு ஏற்கப்பட்ட 50 எம்.பி.,க்கள் அல்லது எம்எல்ஏ.,க்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார் .
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com