கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2ம் தேதி கொரோனா உறுதியானது. வீட்டிலேயே அவர் தனிமைபடுத்தி கொண்டார். தொடர்ந்து, அவரது மகள் பிரியங்காவிற்கும் கொரோனா உறுதியாகி இருந்தது.
இந்நிலையில், டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும், காங்கிரஸ் கட்சியும் விளக்கமளித்துள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா