IAS-Tranfers-Postings-12.06.2022-1
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் அப்பதவியில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகா.
போக்குவரத்து துறை ஆணையராக நிர்மல் குமார்.
ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தருமபு ஆட்சியர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நெடுஞ்சாலைத்துறை செயலரான தீரஜ்குமார், வணிகவரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி ஆட்சியாக சாந்தி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தருமபுரி ஆட்சியரான திவ்யதர்ஷிணி, மகளிர் மேம்பாட்டு நல ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக பணீந்தர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஆட்சியராக இருந்த சிவராசு, வணிக வரித்துறை கோவை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com