கர்நாடகா மற்றும் கோவாவில் ஜூன் 13 முதல் 15 வரை குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.

கர்நாடகா மற்றும் கோவாவில் 2022,  ஜூன் 13 முதல் 15 வரை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பயணம்  மேற்கொள்வார்.

2022, ஜூன் 13 அன்று பெங்களூருவில் உள்ள தேசிய ராணுவப் பள்ளியின் பவள விழா கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார்.

2022, ஜூன் 14 அன்று பெங்களூருவின் வசந்தபுரம்,  வைகுந்த மலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்தா ஆலயத்தை  மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் குடியரசுத் தலைவர்  கலந்து கொள்வார்.

தில்லி திரும்புமுன் 2022,  ஜூன் 15 அன்று கோவாவில்  புதிய ஆளுநர் மாளிகைக்குக்  குடியரசுத்தலைவர் அடிக்கல் நாட்டுவார்.

திவாஹர்

Leave a Reply