யோகா உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், விளையாட்டு ஆளுமைகள், நடிகர்கள் உள்பட வாழ்க்கையின் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து யோகா பயில்வதாகவும் அவர் கூறியுள்ளார். யோகா குறித்த வீடியோ ஒன்றை மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
“கடந்த சில வருடங்களில், யோகா சர்வதேச அளவில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள்,நடிகர்கள் உட்பட பல்துறை பிரபலங்களும் நாள்தோறும் யோகப் பயிற்சியை மேற்கொள்வதோடு அதனால் பெற்ற நன்மைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
–திவாஹர்