சர்வதேச யோகா தினம் 2022-ஐ குவாலியர் கோட்டையில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் கொண்டாடவிருக்கிறது.

குவாலியர் கோட்டையில் 2000-த்திற்கும் அதிகமான பெருந்திரள் மக்களின் யோகா பயிற்சியுடன் 2022, ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தை விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டாடவிருக்கிறது. இந்த நிகழ்வை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியா தலைமை தாங்கி தொடங்கிவைப்பார்.

பிரதமர் நரேந்திர மோதியின் முன் முயற்சியால் ஜூன் 21-ம் நாளை சர்வதேச யோகா தினம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை ஐக்கிய நாடுகள் சபை 2014-ல் அறிவித்தது. நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியான யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது. நமது நாட்டிற்குப் பெருமையான விஷயமாகும்.

“சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா” கொண்டாடப்படும் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை நாடு முழுவதும் உள்ள 75 சிறப்புமிக்க இடங்களில் சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க ஆயுஷ் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது உலகளவில் இந்தியாவை அடையாளப்படுத்தவும் உதவும்

கொவிட்-19 பெருந்தொற்றின் உச்சநிலை காலத்தில் அதன் துயரத்தை குறைக்க மனிதகுலத்திற்கு யோகா சேவை செய்ததை சித்தரிக்கும் விதமாக “மனிதகுலத்திற்கான யோகா” என்பது இந்த ஆண்டு யோகா தினத்தின் மையப்பொருளாகும். கொவிடுக்கு பிந்தைய காலத்திலும் புவிசார் அரசியல் தன்மையிலும் கூட கருணை, இரக்கம், ஒற்றுமை உணர்வு, உலகம் முழுவதும் மக்களிடையே உறுதியை கட்டமைத்தல் மூலம் மக்களை ஒருங்கிணைக்கவும் யோகா உதவியது.

பொதுவான யோகா பயிற்சி, வல்லுனர்களால் யோகா குறித்த விரிவுரை, யோகா விளக்கம் போன்ற நிகழ்ச்சிகள் இந்த விழாவின் போது இடம் பெறும்.

திவாஹர்

Leave a Reply