2021-ல் யோகாவை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துவதற்கு தலைசிறந்த பங்களிப்புக்கான பிரதமரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது யோகா துறையில் மிகுந்த கௌரவத்துக்குரிய விருதாகும். தனிநபர்கள் பிரிவில் லே, லடாக் பகுதியைச் சேர்ந்த பிக்கு சங்சேனாவும், பிரேசிலின் சாவோ பாலோவை சேர்ந்த திரு மார்க்கஸ் வினிசியஸ் ரோஜோ ரோட்ரிக்ஸ்சும் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அமைப்புகள் பிரிவில் உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷின் டிவைன் லைப் சொசைட்டியும், பிரிட்டனின் பிரிட்டிஷ் வீல் ஆப் யோகாவும் இந்த விருதுகளை பெறுகின்றன.
2021-ல் யோகாவை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துவதற்கு தலைசிறந்த பங்களிப்புக்கான விருதுகளை 2016 ஜூன் 21-ல் சண்டிகரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச யோகா தின நிகழ்வில் பிரதமர் அறிவித்தார். இந்த விருதுகளுக்கான விதிமுறைகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டன.
யோகா விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மைகவ் இணையப்பக்க விளம்பரத்தின் மூலம் பெறப்பட்டன. 2021 மார்ச் 29 தொடங்கி மே 11 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 120 விண்ணப்பங்கள் ஆயுஷ் துறையின் செயலாளர் தலைமையிலான பரிசீலனை குழு முதல்கட்ட பரிசீலனையை நடத்தியது. பின்னர் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான நடுவர் குழு தனி் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பட்டியலை தயாரித்தது.
வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றுடன் பாராட்டப்படவுள்ளனர்.
–எம்.பிரபாகரன்