திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அருணாச்சலம் நகர் உள்ளது இங்கு அர்ஜுன் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது.கடை உரிமையாளர் மோகன்ராஜ்.
இந்நிலையில் இன்று 22.06.22 மதியம் பட்டாசு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆமினி வேனில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வேனில் இருந்து தீப்பொறி கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசு மேல் பட்டது இதனையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன கடை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து நாசமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். மேலும் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த சுக்காம் பட்டியை சேர்ந்த ராஜேஷ் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வருகை தந்த ஆய்வு மேற்கொண்டனர் இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
–டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com