குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் இந்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கான வேட்புமனுவை ஜூலை 5ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply