நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்திய நிலக்கரித்துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதேசமயம், சுற்றுச்சூழலை பாதுகாத்து, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், நிலையான வளர்ச்சிப் பாதையில் செல்லவும் திட்டமிட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக, இந்தியா நிலக்கரி கழகம், நிலக்கரி சுரங்க ஏரிகளை பாதுகாத்தல், ஈரமாகவுள்ள நிலங்களின் சுற்றுச்சூழல் தன்மையை பராமரித்தல், மேலும், நிலக்கரி சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை, மாநில அரசுகளின் உதவியுடன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
ராம்சார் பட்டியலில், நிலக்கரி சுரங்க ஏரிகளை இணைப்பதற்கான தகுதி குறித்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராம்சார் பட்டியலில் சேர்ப்பதற்கான ஈரநிலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அறிவுரையின்படி, மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 5 சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க இந்திய நிலக்கரி கழகம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணியில் இந்திய நிலக்கரி கழகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்க ஏரிகளுக்கு, பல்வேறு வகையான பறவைகளும், விலங்கினங்களும் வருகை தருகின்றன. பெரிய அளவிலான தோட்டங்களை அமைப்பது மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட இந்திய நிலக்கரி கழகத்தின் முயற்சிகள், நிலக்கரி சுரங்க ஏரிகளை சுற்றியுள்ள சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்