தமிழகத்தில் கோவிட் பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த நோய் தொற்றுப் பரவலின் வேகம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இதற்கிடையே, இந்த நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
–கே.பி.சுகுமார்