இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்!-போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் இலங்கை அதிபர் மாளிகை.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை அதிபர் மாளிகையில் முகாமிட்டிருக்கும் மக்கள்.

எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிவருகின்றனர்.

இதில் ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். இந்நிலையில் அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்தனர். வேறு வழி இல்லாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி ஓடினார்.

Mahinda Yapa Abeywardena., Speaker of the Parliament in Sri Lanka.

இதற்கிடையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர், இலங்கை அதிபர் கோத்தப்பைய ராஜபக்சைக்கு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply