முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை நன்றாக உள்ளது!- அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்!-காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தகவல்.

File Photo.

Dr. Aravindan Selvaraj

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேகமாக குணமடைந்து வருவதாக சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் தமது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனைகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்து கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் படி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply