சமோலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட சாலைகள் உரிய நேரத்தில் சீரமைப்பு.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த சராசரி மழை அளவான 39 மில்லி மீட்டருக்கு மாறாக முன் எப்போதும் இல்லாத வகையில் சமோலி மாவட்டத்தில்13.7.2022 அன்று பெய்த 79.4 மில்லி மீட்டர் என்ற மிக கனமழையின் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு உரிய நேரத்தில் சரி செய்யப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

புகழ்மிக்க சார்தம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தடை செய்யப்பட்ட நிறுவனத்தை அரசு பணியிலமர்த்தியிருப்பதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. தனது எந்த ஒரு திட்டத்திற்கும் தடை செய்யப்பட்ட ஒப்பந்ததாரரை பணியில் அமர்த்தவில்லை என்றும், முறையான சரிபார்த்தலுக்குப் பிறகே திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்  தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (என்.ஹெச்.ஐ.டி.சி.எல்) தெளிவுப்படுத்துகிறது. இது போன்ற திட்டங்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஏராளமான உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு நான்கு ஆண்டுகள் வரையில் அவற்றைச்  செப்பனிடும் பொறுப்பை ஒப்பந்ததாரர் ஏற்றுக்கொள்ளும் வகையில் சாலைகள் கட்டமைக்கப்படுகின்றன. தரமான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் என்.ஹெச்.ஐ.டி.சி.எல் உறுதி பூண்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply