யூஜினில் நடைபெற்ற உலக தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி என்ற வீராங்கனை 7வது இடம் பிடித்தார்.
அமெரிக்கா, ஓரிகானில் உள்ள யூஜினில் உலக தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் அன்னு ராணி என்ற வீராங்கனை கலந்து கொண்டார்.
இதில் இறுதி போட்டியில் ஏழாவது தான் இடத்தைப் பிடித்தார். இறுதி போட்டியில் 61.12 மீ தான் எறிந்து இருந்தார். அவரது தனிப்பட்ட சிறந்த ரெக்கார்ட்-ஆன ‘63.82’ மீட்டரை விட பின்தங்கி விட்டார்.
தனது முதல் முயற்சியில், அவர் 56.18 மீ மற்றும் இரண்டாவது, 61.12 மீ, பின்னர் அவர் தனது 3வது மற்றும் 4வது முயற்சிகளில் 59.27 மீ மற்றும் 58.14 மீ. அவரது ஐந்தாவது மற்றும் ஆறாவது முயற்சிகளில், அவர் 58.79 மீ மற்றும் 60.18 மீ எட்டி இருந்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
எம்.பிரபாகரன்