கல்வித்துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி அவர் பேசினார்.
கோவிட் பாதிப்பு காலத்திலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எஸ்.திவ்யா