கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். கலைஞர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் தற்போது மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கே.பி.சுகுமார்