குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வீர தீர செயல்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளார்.

76-வது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வீர தீர செயல்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளார்.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளில் வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா, சவுரிய சக்ரா உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கீர்த்தி சக்ரா விருது 3 பேருக்கும், சவுரிய சக்ரா விருது 13 பேருக்கும் வழங்கப்படுகிறது.மேலும், 81 சேனா விருதுகள் உள்ளிட்ட 107 பேருக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply