பிரதமர் நரேந்திர மோதி ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத் மாவட்டத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்.இந்த மருத்துவமனை ஆறாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை இரண்டாயிரத்து 600 படுக்கைகளுடன் நவீன வசதிகளை கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் பஞ்சாப் செல்லும் திரு நரேந்திரமோடி, முல்லன்பூரில் 654 கோடி ரூபாய் மதிப்பில் 300 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
இந்த மையம் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது
திவாஹர்