திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்ட நிர்வாக எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.டி காலேஜ் அருகில் உள்ள கணபதி நகர் மூன்றாவது தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடை சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் சாக்கடை நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அப்பகுதிக்கு நடந்து சென்றாலும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் சென்றாலும் அந்த சாக்கடை நீரில் இறங்கி தான் செல்ல வேண்டி இருக்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி கவுன்சிலருக்கும் பலமுறை தெரியப்படுத்தியும் கூட இந்த சாக்கடை சரி செய்யப்படவில்லை. இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அப்பகுதி மக்கள் தயாராகி வருகிறார்கள்.
எனவே, திருச்சிராப்பள்ளி மாநகர மேயர் மற்றும் ஆணையர் அப்பகுதியை போர்க்கால அடிப்படையில் நேரில் பார்வையிட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
–கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com