கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் உள்ள பி எஸ் ஜி கலைக் கல்லூரியின் பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
தமிழகத்தின் வளர்ச்சியை நாடே திரும்பிப் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.போதைப் பொருட்களின் தீமை குறித்து கூடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் திரு மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply