அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அரசின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாhpகளுக்குள் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆலோசனை கூட்டங்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடல் கூட்டங்களை அலுவலர்களுடன் நடத்தி கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.
அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கு தரப்பினரும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், அனைத்து துறைகளிலும் தமிழகம் விரைவில் முதலிடத்தை எட்டும் என்று மு க ஸ்டாலின் கூறினார்.
எஸ்.திவ்யா