ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
டாக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு ஐ.நா பொதுச்சபையின் ஒருவாரகால கூட்டத்தில் பங்கேற்கிறது.
வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில், 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் வேளையில், ஐ நா-வுக்கும் – இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து அமைச்சர் உரையாற்றுகிறார்.
ஜி-20 மற்றும் ஐ நா பாதுகாப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனும் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் கலந்துரையாடுகிறார்.25-ஆம் தேதியிலிருந்து 28-ஆம் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஆண்டனி பிளிங்டன் மற்றும் உயரதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அமைச்சர் பேச்சுக்கள் நடத்துகிறார்.
பிரிக்ஸ் மற்றும் க்வாட் அமைப்பு நாடுகளின் கூட்டங்களிலும் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.சிறிய நாடுகளும், ஐநா பாதுகாப்புக் குழுவில் உறுப்பினர்களாக சேருவதற்கு உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் அமைச்சர் பங்கேற்கிறார்.
திவாஹர்