பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இத்தடை இன்றிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் துணை அமைப்புகள் நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்நிறுவன உறுப்பினர்களில் சிலர் மற்றும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்பட்டுள்ள SIMI மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்பைக் கொண்டுள்ளதாகவும். மேலும், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள Islamic State of Iraq and Syria (ISIS) போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு இரகசியமாக வேலை செய்து வருவதாகவும், மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு இந்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com