வெடிமருந்து குச்சிகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்கும் சமூக விரோதிகள்!-இலங்கை கடற்பரப்பில் நடக்கும் விபரீதங்கள்..!

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன் பிடிப்பதால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும். இதனை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம், ககரதீவில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது நுணுக்கமாக புதைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு பை ஒன்றில் வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் 400 வர்த்தக வெடிமருந்து குச்சிகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதே யாழ்ப்பாணம், ககரதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 706 நீர் ஜெல் வெடிமருந்து குச்சிகளை அக்டோபர் 05 மற்றும் 07 தேதிகளில் இலங்கை கடற்படையினர் ஏற்கனவே கைப்பற்றினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விசியத்தில் இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும், இருப்பது ரொம்ப நல்லது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply