கோயம்புத்தூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் இறந்தது குறித்து நடைபெற்ற விசாரனையில் 5 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இந்த கைதுக்குப் பிறகு பல சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது .
வெடித்த வாகனத்தில் மர்ம வெடிப் பொருள்கள் இருந்ததா ? என்பது குறித்து பெருத்த கேள்வி ஏழுந்துள்ளது . இது திட்டமிட்ட சதியா ? இதன் உள்நோக்கம் என்ன ?, இதன் பின்னனி என்ன ? என்ற மக்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமையும் , பொறுப்பும் ஆளும் ஆட்சியாளர்களுக்கும் , காவல்துறையினருக்கும் உள்ளது . இதில் கைதானவர்களின் பின்னனி என்ன ?, அவர்களின் உள்நோக்கம் என்ன ? என்பதை காவல்துறையினர் விரைவாக கண்டுபிடிக்க கூடிய உறுதியான நிலையை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஏற்கனவே நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் மேலும் ஏற்படுவது , பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஆட்சியாளர்கள் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க கூடிய வகையில் செயல்படுவதும் , அதற்குண்டான நடவடிக்கைகளை எடுப்பதும் மிக அவசிமாகவும் , அவசரமாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.திவ்யா