பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

நம் நாட்டு மக்கள் சாதி , மத , இன , மொழி வேறுபாடுகளை கடந்து , யாராக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களும் முன்னேற வேண்டும் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கருத்து .

அதே சமயம் , வழங்கப்படும் இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது .

மேற்கண்ட இரண்டின் அடிப்படையில் பின் தங்கியுள்ள அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் .

அந்த வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினரில் முற்படுத்தப்பட்டோருக்கு கல்வி , அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று தற்போது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை த.மா.கா சார்பில் வரவேற்கிறோம் .

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply