ஜனநாயகத்தில் நான்காவது தூணாக செயல்படும் பத்திரிகைத்துறை நாட்டு மக்களுக்கும் , நாட்டிற்கும் பயன் தரும் வகையில் செயல்படுவது பெருமைக்குரியது .
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது முதல் நாடு சுதந்திரம் அடைந்து இன்று வரை நாட்டு மக்களுக்கும் , மத்திய மாநில அரசுகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதில் பத்திரிகைத் துறையின் பங்கு பெரும் பங்காகும் .
நம் நாட்டில் பத்திரிகைகள் , தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்கள் , ஆசிரியர்கள் , ஒளிப்பதிவாளர்கள் , பணியாளர்களின் புகைப்படக்கலைஞர்கள் அர்ப்பணிப்பான பணி . போன்ற அனைத்து பணி நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராமல் , கடின உழைப்பை மேற்கொண்டு செய்திகளை சேகரிப்பதிலும் சரி , பத்திரிகைத் தர்மத்தை கடைப்பிடிப்பதிலும் சரி பத்திரிகையாளர்களின் பணி பெரிதும் பாராட்டத்தக்கது .
நாட்டு நடப்புக்களை கல்வி , விவசாயம் , தொழில் , அறிவியல் என பல்வேறு துறைகளைப் பற்றிய செய்திகளை , உலக அளவிலான செய்திகளை சேகரிப்பதிலும் , அதனை ஒளிபரப்புவதிலும் பத்திரிகையாளர்கள் மேற்கொள்ளும் பணி சிறப்பானது .
ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் முக்கியப் பங்காற்றும் பத்திரிகையாளர்களை நினைத்து , கவுரவப்படுத்தி , பாராட்டி , புகழும் வகையில் தான் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட வேண்டும் . நம் நாட்டின் வருங்காலத்தை வளம் மிக்கதாக , வலிமை மிக்கதாக மாற்றும் சக்தி பத்திரிகையாளர்களின் கையிலும் உள்ளது .
எனவே தேசிய பத்திரிகையாளர் தினத்தில் செய்தித்தாள் , தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகத்தின் பத்திரிகையாளர்களும் பத்திரிகைத் தர்மத்தோடு தங்களின் பணியை தொடர்ந்து மேற்கொண்டு தாங்களும் , பத்திரிகைத்துறையும் மென்மேலும் சிறக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்