வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் மாணவியின் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணையினை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.11.2022) வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சி.கார்த்திகேயன்