பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான மொத்த வேட்டி, சேலைகளை கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கே.பி.சுகுமார்