போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கல்லணை சாலை!-பரிதவிக்கும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள்!

???????

திருச்சி, திருவானைக்காவல், திருவளர்சோலை வழியாக கல்லணை வரை செல்லும் சாலையில் மணல் லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும், கல்லணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும் தினந்தோறும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி பைபாஸ் காவிரி பாலத்தில் இருந்து பொன்னி டெல்டா வரை இந்த போக்குவரத்து நெரிசல் மிகக்கடுமையாக அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், மணல் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து, மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஏஜென்டுகள் விலை பேசுவதால், நீண்ட வரிசையில் மணல் லாரிகள் தேங்கி நிற்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழித்தடத்தில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி பைபாஸ் காவிரி பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுக்குறித்து நமது “UTL MEDIA” சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது (புகார் எண்: CFS15925428)

ஏற்கனவே அந்த வழித்தடத்தில் சிமெண்ட் கலவை கனரக வாகனங்களும், செங்கல் தொழிற்சாலை லாரிகளும் அதிக எண்ணிக்கையில் சென்று வரும் நிலையில், தற்போது மணல் லாரிகளால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கல்லணை அருகே மணல் குவாரி அமைத்ததற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் அப்பகுதி மக்கள், இந்த போக்குவரத்து நெரிசலால் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

எனவே, இந்த போக்குவரத்து நெரிசலை முழுமையாக தடுப்பதற்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த பகுதியை நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply