தடுக்க இயலாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விரிவான காப்பீடு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கூறியுள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் உலகிலேயே 3-வது பெரிய பயிர் காப்பீட்டு திட்டமாகும். இது வரும் ஆண்டுகளில் நம்பர் 1 திட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் இந்த காப்பீட்டு திட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகள் ரூ.25,186 கோடி பிரிமியம் செலுத்தியுள்ளனர். 2022, அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி ரூ.1,25,662 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.