சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்’ கொண்டாடப்படுவதையொட்டி, மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணையம் (இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்), அதன் ஆலைகள்/அலகுகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சாதனங்களை பெருவணிக சமூக பொறுப்பு நிதியிலிருந்து விநியோகித்தது. இந்த முன்னுரிமைத் திட்டத்தை மேற்கொள்வதற்காக ஆணையம் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகத்தை ஈடுபடுத்தியுள்ளது. புதுதில்லியில் நடந்த நிகழ்வின் போது, ஆணையத்தின் தலைவர் திருமதி சோமா மொண்டல் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுதலையின் அமுதப்பெருவிழாவின் ஒரு கட்டமாக ,இந்த முன்னுரிமை நிகழ்ச்சியானது, நாட்டின் பல இடங்களில் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் கேன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் செவித்திறன் கருவிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
தற்போது, இந்திய உருக்கு ஆணையம் தனது ஆலைகளுக்கு சொந்தமான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள், இல்லங்களை நடத்தி வருகிறது. ரூர்கேலாவில், ‘பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி’ , பொகாரோவில் ‘ஆஷாலதா கேந்திரா’, ‘ஊனமுற்றோர் சார்ந்த கல்வித் திட்டம்’ துர்காபூரில் ‘துர்காபூர் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி இல்லம்’ பர்ன்பூரில் ‘செஷயர் ஹோம்’ ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எம்.பிரபாகரன்