முப்படைகளில் பெண்களின் பங்கேற்பு கீழ்க்காணும் வகையில் உள்ளது
ராணுவம் (ஜூலை 1, 2022 நிலவரப்படி):
அதிகாரிகள் (ஏஎம் சி /ஏடி சி தவிர) 3.97%
அதிகாரிகள் (ஏஎம் சி /ஏடி சி) 21.25 %
எம்என்எஸ் அதிகாரிகள் 100%
ஜே சி ஓ /ஓ ஆர் 0.01%
கடற்படை: அதிகாரிகள் சுமார் 6%
விமானப்படை: (டிசம்பர் 1, 2022 நிலவரப்படி)
அதிகாரிகள் (மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கிளை தவிர) 13.69%
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான பதவி எதுவும் காலியாக இல்லை. இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படையில் அனுமதிக்கப்பட்ட பதவிகள் பாலின சமத்துவமானவை.
பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முப்படைகளில் பெண்களை ஈடுபடுத்துவதில் சீரான வளர்ச்சி ஏற்பட்டு வருவதால் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தத் தகவலைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
திவாஹர்