மகாகவி பாரதியார் பிறந்த நாளான இன்று, தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் பெருமையை போற்றினார்.
மேலும் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் சார்பில் உத்திரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து, அந்த நினைவு இல்லத்தினை திறந்து வைத்தார்.
மேலும் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
கே.பி.சுகுமார்