வளரும் இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் (PM SHRI) என்ற திட்டத்திற்கு செப்டம்பர் 7-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேசிய கல்விக்கொள்கை 2020-ன் கீழ், பள்ளிகளை மேம்படுத்த இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய , மாநில , யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நிர்ணியிக்கப்படும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நடப்பு கல்வியாண்டிலிருந்து 2026-27-ஆம் கல்வியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 5 ஆண்டுகாலக்கட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.27,360 கோடி செலவிடப்படும். இதில், மத்திய அரசின் பங்கு ரூ.18,178 கோடியாக இருக்கும். பள்ளிகளில் நவீன வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்.
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
திவாஹர்